பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (02-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, எந்த ஒரு எதிர்ப்பையும் சமாளிக்க முடியும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தின் மீது கூடுதல் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய விஷயங்கள் நடக்கும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி

ராசி நேயர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். எதார்த்தமாக பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வர். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.

கன்னி ராசி

நேயர்களே, நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு வரும். பிரியமானவர்களுக்காக விட்டுக்கொடுத்து போகவும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். பயணங்கள் தடைப்படும். உறவினர் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பேசுவர். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

விருச்சிக ராசி

நேயர்களே, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். வரவேண்டிய பணம் தாமதமாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். பிரியமானவர்கள் சந்திப்பு நிகழும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி

நேயர்களே, குடும்ப நபர்களை அனுசரித்து போகவும். நண்பர்களிடத்தில் மனசங்கடங்கள் வரும். எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்திற்கு நல்ல செய்தி வரும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீன ராசி

நேயர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts