Home சினிமா வெளியான பிக்பாஸ் கவின் வெப் தொடரின் போஸ்டர்

வெளியான பிக்பாஸ் கவின் வெப் தொடரின் போஸ்டர்

0
வெளியான பிக்பாஸ் கவின் வெப் தொடரின் போஸ்டர்

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் கவின், தற்போது இவர் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆகாஷ் வாணி'-ரொமான்டிக் வகை வெப்சீரிஸ்!

இதனிடையில் நடிகர் கவின் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here