பிந்திய செய்திகள்

தாய்மையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன் – பிரபல நடிகை தகவல்

நடிகர் சர்வானாந்த் நடிக்கும் படம் கணம். இப்படத்தில் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.இப் படத்தின் படப்பிடிபு நிறைவு பெற்ற நிலையில் படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரிலும் தமிழில் ‘கணம்’ என்ற பெயரிலும்உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் இப்படத்தின் அம்மா பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அனைவரையும் குதுகலப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கணம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக நடிகை அமலா கூறியிருப்பதாவது:

53 வயதில் அசால்ட் பண்ணும் அமலா.. தலைகீழாக வெளியிட்ட அசத்தலான புகைப்படம் -  Cinemapettai

“மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே இந்த அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ‘கணம்’ படத்தில் அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமையாக உணர்கிறேன்.

நான் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தாய் தான். அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். நான் படத்தை முடிக்கும் வரை, எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன். அது மிகவும் மதிப்புமிக்க விஷயம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று பகிர்ந்திருக்கிறார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts