பிந்திய செய்திகள்

நான் இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் – ராகுல் ராமகிருஷ்ணா அறிவிப்பு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ எனும் படம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு நண்பனாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. சமீபத்தில் வெளியான ‘ஸ்கைலேப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா சினிமாதுறையிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில், ‘2022-ம் ஆண்டுதான் எனக்கு கடைசி. இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். இது குறித்து எனக்கு கவலை இல்லை, யாரும் கவலைப்பட வேண்டாம்’ என ராகுல் ராமகிருஷ்ணா கூறியுள்ளார். இந்த அறிவிப்பு சினிமா துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts