Home சினிமா ஸ்ரீகாந்த் சிம்புவை பற்றி வெளியிட்ட உருக்கமான பதிவு!

ஸ்ரீகாந்த் சிம்புவை பற்றி வெளியிட்ட உருக்கமான பதிவு!

0
ஸ்ரீகாந்த் சிம்புவை பற்றி வெளியிட்ட உருக்கமான பதிவு!

வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’. வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் விழாவில் ஸ்ரீகாந்த் பேசும்போது, ‘இப்படத்தின் டைட்டிலைக் கேட்டதுமே சற்று தயக்கமாகத்தான் இருந்தது. கதையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது. சில பேர் சொல்லும்போது ஒன்றாகவும், படமாக்கும்போது வேறு ஒன்றாகவும் செய்வார்கள்.

படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர் அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. அப்படி செய்தால் வேறு சிலருடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது. ஹேட்ஸ் ஆப் சிம்பு. ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு டோட்டலாக இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்து விடுவார். சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார்.

படங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும்போது சில விஷயங்களில் நம் யோசனையை சொல்வோம். அது ஒரு நடிகர் என்று இல்லாமல் பார்வையாளரின் கண்ணோட்டத்திலும் இருக்கும்.

அதனால் ஹீரோக்கள் சொல்லும் சில விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.. என்னைப் பொருத்தவரை ஐடியா கொடுப்பது தவறில்லை. ஆனால் குறுக்கீடு செய்யக்கூடாது க்ளைமாக்ஸில் கூட எனக்கு சற்று கருத்து மாறுபாடு இருந்தது.. இயக்குநரிடம் அதை மாற்றி விடலாமா எனக் கூறினேன்.

ஆனாலும் தான் இப்படித்தான் மனதில் உருவகப்படுத்தி வைத்திருப்பதாக அவர் சொன்னார்.. சரி என அவர் விருப்பத்திற்கு விட்டு விட்டேன்.. அவர் என்னிடம் என்ன சொன்னாரோ அதைக் கொஞ்சமும் மாற்றாமல் அவர் போக்கிலேயே எடுத்துவிட்டார்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here