பிந்திய செய்திகள்

அருண் விஜய்யின் புதிய படத்தின் அப்டேட் வெளியானது!!!

இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படம் யானை. இதில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கே.ஜி.எப் பிரபலம் ராம், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் யானை படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இதற்குமுன் இந்த ஜோடி மாபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்துக் கதையை மையமாக வைத்து ஆக்சன் படமாக யானை உருவாகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்த பாடலான “போதைய விட்டு வாலே” என்ற பாடலை பிப்ரவரி 11ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts