Home சினிமா வெளியான தனுஷின் ரொமாண்டிக் போஸ்டர்

வெளியான தனுஷின் ரொமாண்டிக் போஸ்டர்

0
வெளியான தனுஷின் ரொமாண்டிக் போஸ்டர்

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். இதனை தயாரிக்கிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

மாறன் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், காதலர் தினமான இன்று மாறன் படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தனுஷின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here