பிந்திய செய்திகள்

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை குஷ்பு

நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி 1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் மோகன். இவர் பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், விதி, இளமை காலங்கள், மவுனராகம், உயிரே உனக்காக, கோபுரங்கள் சாய்வதில்லை உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. 2008-ல் சுட்டப்பழம் என்ற படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார் மோகன். இவர் நடிக்க உள்ள படத்தை விஜய் ஶ்ரீஜி இயக்குகிறார். இவர் சாருஹாசன் நடித்த தாதா 87 என்ற படத்தை இயக்கி பிரபலமானவர்.

மோகனுக்கு ஜோடியாகும் குஷ்பு | Dinamalar

மோகன் நடிக்கும் படத்துக்கு ஹரா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் மோகன் ஜோடியாக குஷ்பு நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். மோகனும், குஷ்புவும் ஏற்கனவே தெலுங்கு படமொன்றில் இணைந்து நடித்துள்ளனர். தமிழில் முதல் முறையாக ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் ஊட்டியில் தொடங்கவுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts