பிந்திய செய்திகள்

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூதாட்டிக்கு மருந்தாக மாறியது !

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. 30 மில்லியன் பார்வைகள், 2.5 மில்லியன் லைக்குகள் என ஏகப்பட்ட சாதனைகளை படைத்து மெர்சல் காட்டி வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூதாட்டி ஒருவர் அரபிக் குத்து பாடலை பார்க்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது.

இந்நிலையில் 30 மில்லியன் வியூஸ் மற்றும் 2.5 மில்லியன் லைக்குகளுடன் தொடர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து ஏகப்பட்ட சாதனைகளை படைத்து வருகிறது அரபிக் குத்து.

உலகம் முழுவதிலுமிருந்து ஏகப்பட்ட ரசிகர்கள் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை சன் பிக்சர்ஸ் போட்ட ட்வீட்டுக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர். அதில் குழந்தைகள் முதல் பெரியவர்க்ள் வரை அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில், வயதான மூதாட்டி ஒருவர் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலை பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

வரிகள் புரியவில்லை என்றால் என்ன? மருத்துவமனையில் மூதாட்டிக்கு மருந்தாக  மாறிய விஜய் பாட்டு! | Grandma watching Vijay's Beast 'Arabic Kuthu' song in  hospital video touches ...

இதேவேளை ஏற்கனவே நடிகர் விஜய்யின் செல்ஃபி புள்ள உள்ளிட்ட பாடல்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவியதாக செய்திகள் வெளியான நிலையில், அரபிக் குத்து அதுபோன்ற ஒரு விஷயத்தை செய்துள்ளது.

அதேசமயம் அரபிக் குத்து பாடலின் சில வரிகள் அரபி மொழியில் உள்ளதால் அர்த்தமே புரியவில்லை என ட்ரோல்கள் எழுந்து வருகின்றது.

இந்த நிலையில், இந்த வீடியோவை ஷேர் செய்த நெட்டிசன் பாடல் வரிகள் புரியவில்லை என்றால் என்ன திரையில் தோன்றி ஆடுவது விஜய் அது ஒன்று போதாதா? 6 முதல் 60 வரை அனைவரையும் கவர்ந்தவர் அவர் பதிவிட்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts