பிந்திய செய்திகள்

சின்னத்திரையில் கால் பதிக்கும் சாயா சிங்

‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சாயா சிங்.இவர் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் தமிழரசன் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார்.

‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ சீரியலில் சாயா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெற்றோர்களை இளம் வயதிலேயே பறிகொடுத்த பிறகு குடும்ப பொறுப்புகள் தலை மீது விழுகிற இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் சாயா சிங் நடித்து வருகிறார்.

தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடி வாழ்வில் ஜெயிக்கவும் தனது சகோதரிகளை பாதுகாப்பாக பேணி வளர்க்கவும் உறுதிமொழி ஏற்கும் பெண்ணாகவும் சாயா சிங்கின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts