பிந்திய செய்திகள்

ரசிகர்களை ஈர்த்த பிரபு தேவா மாற்றம்!

இந்திய சினிமாவில் நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருப்பவர் பிரபு தேவா. இவர் தற்போது ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, ‘பொய்க்கால் குதிரை’, ’மை டியர் பூதம்’ போன்ற பல படங்களில் நடித்துவருகிறார். இவர் கடைசியாக நடித்த ”தேள்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் பிரபு தேவா அடுத்தாக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விடிவி கணேஷ், மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘முசாசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜாய் பிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டைமென்ட் நிறுவனத்தின் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.

ஜப்பானிய போர்வீரரான முசாசியின் பெயரை இப்படத்திற்கு வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Image

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts