பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் . அனிருத் இசையமைக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன.
சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் பல சாதனைகளை படைத்திருந்தது, தற்போது வரை யூட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் அரபிக் குத்து பாடல் உள்ளது.
இப்பாடலில் பலரையும் கவர்ந்த விஜய்யின் நடனம் அனைவரையும் நடனமாட வைத்துள்ளது. தற்போது இந்த அரபிக் குத்து பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளார். இவர் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
https://www.instagram.com/reel/CaFbWwihqJK/?utm_source=ig_web_copy_link













































