Home சினிமா ரசிகர்களுடன் வருகை தந்து வாக்கு அளித்த தளபதி விஜய்!

ரசிகர்களுடன் வருகை தந்து வாக்கு அளித்த தளபதி விஜய்!

0
ரசிகர்களுடன் வருகை தந்து வாக்கு அளித்த தளபதி விஜய்!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிவப்பு நிற காரில் வந்தார்.

ரசிகர்கள் புடை சூழ காரில் வந்து வாக்குபதிவு செய்த விஜய் || Tamil cinema  vijay voted

அவரது இல்லத்தில் இருந்தே ரசிகர்கள் புடை சூழ வந்த விஜய், நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

கடந்த முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசுபொருளாக ஆன நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற சாண்ட்ரோ காரில் வந்து வாக்களித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here