சமீபத்தில், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக நடந்து முடிந்தது நகரப்புற உள்ளாட்சித் தேர்தல். இதற்கான,வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு முழுவதுமே இந்த தேர்தலுக்கு மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.பல சினிமா பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இருந்தாலும் அஜித், சிம்பு போன்ற சில நடிகர்கள் ஊரில் இல்லை எனவும் அதனால் வாக்குகளை பதிவு செய்ய முடியவில்லை என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் தனக்கான வாக்குச்சாவடியில், தனது வாக்கை முதல் ஆளாக பதிவு செய்தார் நடிகர் விஜய்.
வாக்கை செலுத்துவதற்காக சிவப்பு நிற மாருதி காரில் விஜய் வந்து தன்னுடைய வாக்கினை செலுத்தினார். அவரிடம் இல்லாத காரே இல்லை எனும் அளவிற்கு பல பிராண்ட் சொகுசு கார்களை வைத்துள்ள விஜய், மிகச்சாதாரண மாருதி காரில் வருகை தந்தது இணையத்தில் வைரலானது.
முன்னதாக நடிகர் விஜய் கடந்த சட்டசபை தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்குப்பதிவு செய்த காட்சியும் வைரலானது. சரி இப்போது இதற்க்கு காரணம் என்ன என்று தேடிய போது, விஜய் வீட்டுக்கும் வாக்குச்சாவடிக்கும் இடையே உள்ள சாலை மிகவும் குறுகலான சாலை என்பதால் சிறிய காரை விஜய் பயன்படுத்தியதாக கூறப்பட்டது.
சிறிய காரில் விஜய் வந்தது ஒருபுறம் இருந்தாலும் இப்போது பிரச்சனை அது இல்லை. விஜய் வந்த அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தப்படவில்லை என்பதை யாரோ கண்டுபிடித்து அதை சமூக வலைத்தளத்தில் பரப்பியும் இருக்கின்றனர்.
விஜய் வந்த மாருதி காரின் இன்சூரன்ஸ் காலவதியானதாகவும் கூறப்பட்டது. இதனால் சோஷியல் மீடியாவில் வழக்கம் போல் சிக்குனாண்டா சிவனாண்டி என்பது போல பலரும் விஜய்யை வறுத்தெடுத்தனர்.
எப்போதும் அமைதியாக பிரச்சனைகளை கையாளும் விஜய் தரப்பு இதில் பொறுக்க முடியமால் இந்த கேலி கிண்டலுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறது.
உடனடியாக இன்சூரன்ஸ் தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது விஜய் தரப்பு. அதன்படி விஜய் வந்த மாருதி செலெரியோ மாடல் காருக்கு இன்சூரன்ஸ், ஜூன் 16 2021 முதல் ஜூன் 15 2022 வரை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இன்ஸுரன்ஸ் காப்பியை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
மேலும், அதேபோல் Third party இன்சூரன்ஸ் 2022 மே 28 வரை வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் வந்த குறிப்பிட்ட கார் ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் வந்த கார் கலர் அவர் அணிந்திருந்த மாஸ்க் கலர் என அதையே உண்ணிப்பாக கவனித்து அதை வைத்து கன்டென்ட் எடுக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
அதனால் இந்த ரூட்டில் அடிக்க நினைத்த போது விஜய் சுதாரித்து கொண்டார். விஜய் மைண்ட் வாய்ஸ் “ஒரு ஓட்டு போட வந்தது குத்தமாடா..?” இப்படித்தான் இருக்கும்.