பிந்திய செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட்டில் கமலுக்கு பதில் இவரா..?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே நிரம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நேரடியாக ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகிறது, இதனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.

பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதியன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என அவர் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.

விக்ரம் திரைப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில், கமலுடன் பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியிருந்தது.

Me are not fans - Actor Simbu Angry || எனக்கு ரசிகர்கள் இல்லையா? - நடிகர்  சிம்பு ஆவேசம்

எனவே, இதிலிருந்து விலகுவதாகவும் மேலும் பிக்பாஸ் சீசன்-6 இல் உங்களை சந்திக்கிறேன் என்றும் கமல் அறிவித்திருந்தார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிக்பாஸ் ரசிகர்கள், அடுத்து இதனை தொகுத்து வழங்கப்போவது யார் என முணுமுணுத்து வந்தனர். இந்நிலையில் இதனை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts