பிந்திய செய்திகள்

அஜித்தின் வலிமை ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘வலிமை’. இப்படத்தில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் உருவான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

திட்டமிட்டப்படி இன்று காலை வலிமை திரைப்படம் தியேட்டரில் வெளியானது. சில தினங்களுக்கு முன்பாக ரசிகர்கள் ஆர்வமாக தியேட்டரில் வரிசையில் நின்று டிக்கெட்டுக்களை வாங்கிச் சென்றார்கள். வலிமை திரைப்படம் வெளியானதை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள பல தியேட்டர்களில் ரசிகர்கள் அஜித்துக்கு கட்-அவுட்டு வைத்து பால் அபிஷேகம் செய்து மாலை போட்டு கொண்டாடினர். மேலும் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்து நடனம் ஆடியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts