Home சினிமா டான் படம்-எப்போது ரிலீஸ் தெரியுமா???

டான் படம்-எப்போது ரிலீஸ் தெரியுமா???

0
டான் படம்-எப்போது ரிலீஸ் தெரியுமா???

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அட்லீயின் துணை இயக்குனர் சிபி சக்ரவத்தியின் அறிமுக இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தில், கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
கல்லூரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன், மிர்ச்சி விஜய், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே இப்படத்திலிருந்து ‘ஜலபுலஜங்’ பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டான் திரைப்படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here