பிந்திய செய்திகள்

டிரைலரை வெளியிட்டு புதிய சாதனை படைத்த மாறன்!

சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய பர்ஸ்ட் லுக், டிரைலர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும்.

ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரைலரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக “மாறன்” திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தற்போது மாறன் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

“மாறன்” திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts