பிந்திய செய்திகள்

ரிலீஸ் தேதியை மாற்றியமைத்த டான்…

முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், தற்போது நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.

டான்

சமீபத்தில் டான் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்திகேயன் அறிவித்திருந்தார். மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிக்கையில்,” இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாவதை கருத்தில் கொண்டு டான் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் ‘டான்’ திரைப்படம் வரும் மே மாதம் 13-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts