Home சினிமா ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

0
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர்மேலும் வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனை லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கவுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தில் பணியாற்றும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரபூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here