பிந்திய செய்திகள்

நடிகை நிக்கி கல்ராணிக்கு விரைவில் திருமணம்!

தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட படங்களில் நடித்து இருக்கிறார்.

நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை. மேலும்

ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

nikki galrani: பிரபல நடிகருடன் காதலில் நிக்கி கல்ராணி ? விரைவில் திருமணம்  என தகவல்..! - rumours around actress nikki galrani marriage | Samayam Tamil

இந்த நிலையில் நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதனை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.

Aadhi and Nikki Galrani to work again together | nowrunning

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts