பிந்திய செய்திகள்

பாக்யராஜுடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர்.

1992ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய ’ராசுகுட்டி’ படத்தில், பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக இணைந்திருந்தனர். இந்நிலையில் இந்த ஜோடி 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிக்கும் படத்தில் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

30 வருடங்கள் கழித்து ஜோடி சேரும் பாக்யராஜ் - ஐஸ்வர்யா! போட்டோ வைரல் -  சினிஉலகம்

மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, போன்ற படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts