பிந்திய செய்திகள்

சமூக வலைத்தளத்தில் “நாளை” என பதிவிட்ட நெல்சன்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ஹீரோயினாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இதற்கான போஸ்டர்களும் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குன் நெல்சன் திலிப்குமார் சமூக வலைத்தளத்தில் நாளை என்று பதிவிட்டுள்ளார்.

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022

இதனை ரசிகர்கள் அவர்களின் வியூகத்திற்கு ஏற்ப படத்தின் போஸ்டர் வெளியாகிறது, பாடல் வெளியாகிறது என்று பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இதன் அறிவிப்பு வெளியான பிறகே இப்பதிவிற்கான உண்மை தன்மை தெரியும் என பலர் பதிவிட்டு வருகின்றனர்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts