பிந்திய செய்திகள்

மாஸ் காட்டும் தளபதியின் பீஸ்ட் டிரைலர்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட் .

இப்படத்தில் விஜய் RAW ஏஜெண்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டியளித்த நெல்சன் திலீப்குமார், படத்தில் விஜய்யின் பெயர் வீரராகவன். படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் படத்தை திரையரங்குகளில் பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இங்கு விஜய் தனது ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்திலும் பக்காவாக நடிக்கிறார்.

பீஸ்ட் படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் கேஜிஎப் படத்தின் டிரைலர் சார் அவர் வெளிவரும்போது யாரும் குறுக்கே வரக்கூடாது என வசனம் வைத்தபடி கூறியிருப்பார்.

ஆனால் தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்த்த விஜய் ரசிகர்கள் என்ன பயமா இருக்கா இனிமேல்தான் பயங்கரமா இருக்கும் என கூறிவருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts