நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசையை இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் பூர்த்தி செய்யவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













































