பிந்திய செய்திகள்

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பற்றி வெளியான பகீர் தகவல்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ள
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. . இப்படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தை குவைத் அரசு தடை செய்துள்ளது. வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தடை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts