பிந்திய செய்திகள்

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் இணைந்த வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘மன்மத லீலை’. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் சக கலைஞர்கள் பற்றி விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts