பிந்திய செய்திகள்

ஹாலிவுட்டில் கால் வைக்கும் பிரபாஸ்

இந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள நடிகர் பிரபாஸ்
பாகுபலி படத்தில் நடித்த பிறகு நடிக்கும் படங்களை தெலுங்கில் மட்டுமன்றி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட்டு வசூல் பார்க்கிறார்கள். பிரபாஸ் சம்பளத்தையும் ரூ.100 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபாஸ், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்த ராதே ஷியாம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். ஆதிபுருஷ் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர். கிருத்தி சனோன் சீதையாக வருகிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் படமொன்றில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், விரைவில் ஒப்பந்தத்தில் பிரபாஸ் கையெழுத்து போடுவார் என்றும் கூறப்படுகிறது. பிரபாஸ் ஹாலிவுட் படத்தில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts