பிந்திய செய்திகள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் குவிந்த தளபதி ரசிகர்கள்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது வழக்கம் போல், விஜய்யின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலமாக்கினர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொழும்பு நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விஜய் படமான ‘பீஸ்ட்’ ரிலீசாகி உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், விஜய் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பீஸ்ட் படத்துக்கு அங்கு 850 முதல் 3,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதார நெருக்கடியிலும் இலங்கையில் குவிந்த பீஸ்ட் ரசிகர்கள் || Tamil  cinema vijay beast fans in srilanka

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts