பிந்திய செய்திகள்

சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா..எதற்கு தெரியுமா?

“காத்துவாக்குல ரெண்டு காதல்”.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி படக்குழு கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகின.

சமந்தாவை கட்டியணைக்கும் நயன்தாரா

இந்நிலையில் நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்து வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோவை சமந்தா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts