பிந்திய செய்திகள்

ரசிககர்களுடன் டான் படத்தை பார்த்து ரசித்த பிரபல நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் இவர் தற்போது நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, பால சரவணன், சிவாங்கி உள்ளிட்ட நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ‘டான்’ திரைப்படம் இன்று (13.05.2022) அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அதிகாலை முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர்.

சிவகார்த்திகேயன் - அனிருத்

இப்படத்தை படக்குழு ரசிகர்களுடன் திரையரங்குகளில் பார்த்து ரசித்துள்ளனர். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்து ரசித்தார். இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் ஷாரிக், ஆர்.ஜே.விஜய், நடிகை சிவாங்கி ஆகியோரும் ரசிககர்ளுடன் டான் படத்தை பார்த்து ரசித்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts