பிந்திய செய்திகள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் துன்புறுத்தல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Copyrights © 2026 Tamilwin. All rights reserved.

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரினால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் அநுராதரபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

அநுராதபுரம், புனித வெள்ளரசு மர விகாரை (ஜய ஸ்ரீ மகா போதி விகாரை) வளாகத்தில் வைத்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாகக் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோட்டாபயவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! குற்றஞ்சாட்டும் சரத் வீரசேகர

உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் (SI) சந்திர சுமிந்த ஹேவா பதினிகே என்ற அதிகாரி மீதே இக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி மேற்குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிள், சம்பவம் தொடர்பில் உடனடியாக உடமலுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குத் தொலைபேசி மூலம் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலையாபத்துவ பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

ஆனால், வெறும் ஒரு மாதத்திற்குள் அவர் மீண்டும் அதே உடமலுவ பொலிஸ் நிலையத்திற்கே இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.

இந்த சம்பவம் 2023 ஆகஸ்டில் நடந்த போதிலும், சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குப் பொலிஸார் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகத் தாமதித்துள்ளனர். அவர் கடந்த 2024 டிசம்பர் 02 ஆம் திகதியே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சவேந்திர சில்வா முதல்வர் வேட்பாளரா..! பரவும் தகவலுக்கு சஜித் தரப்பினர் மறுப்பு

தற்போது பிணையில் (Bail) விடுவிக்கப்பட்டுள்ள அவரை, வரும் ஜூலை மாதம் 07 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி அதே பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றுவதால், மற்ற அதிகாரிகள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.

இவ்வாறான பின்புலத்தில் குறித்த வழக்கு நேற்று (03) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது வழக்குத் தொடர்பான பொலிசாரின் அசமந்தப் போக்கு குறித்து பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவம் தொடர்பில் சமர்ப்பித்துள்ள தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை (Audio Recording) பரிசோதித்து, அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தற்போது நிபுணர் அறிக்கைபெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய கைப்பேசியை (Mobile Phone) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அல்லது விசேட நிபுணர் பரிசோதகரிடம் (Government Analyst) அனுப்பி அறிக்கை கோருமாறு அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை உடன் நடைமுறைப்படுத்துமாறு அனுராதபுர மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

மட்டக்களப்பு, Toronto, Canada

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

பருத்தித்துறை

அல்வாய், Colchester, United Kingdom

நுணாவில் மேற்கு, மன்னார்

London, United Kingdom

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

உடுப்பிட்டி

வண்ணார்பண்ணை

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

Markham, Canada

மண்டைதீவு, Brampton, Canada

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

அளவெட்டி, கொழும்பு

கொழும்பு, இளவாலை

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

Copyrights © 2026Tamilwin. All rights reserved.

மூல செய்தி: Tamilwin

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts