பிந்திய செய்திகள்

அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான பணம் கொள்ளை – வெளியான தகவல்

Copyrights © 2026 Tamilwin. All rights reserved.

ஹொரணையில் உள்ள அரச வங்கியில் நடந்த துணிச்சலான பணக்கொள்ளை தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணையை தொடங்கியுள்ளது.

பொலிஸ் தகவலின்படி, அந்த நேரத்தில், கால்நடையாக சம்பவ இடத்திற்கு வந்த சந்தேகநபர் பணம் இருந்த இரண்டு பைகளையும் பறித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு தனிநபர் 3 கோடி ரூபாவியை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பணம் அடங்கிய பணப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளன.

ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பணப்பையை நபரொருவர் கொள்ளையடித்து தப்பியோடியிருந்தார்.

இந்த திருட்டு சம்பவம் நேற்று (03) பிற்பகல் சுமார் 2.55 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகை பணம் பட்டப்பகலில் கொள்ளை

இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்ய ஹொரணை தலைமையக பொலிஸ் உட்பட பல பொலிஸ் குழுக்கள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன.

பொலிஸ் விசாரணைகளின் படி, இந்த பணம் மில்லனியா, மொரகஹேனா, பொக்குனுவிட்ட மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள கிளை வங்கிகளின் ஏடிஎம்களுக்கு எடுத்துச்செல்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வங்கியின் உதவி மேலாளர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் பணத்தை ஏற்றுவதற்காக, பணப்பைகள் நிரம்பிய இரண்டு பைகளுடன் வங்கியின் பின் வாசல் வழியாக வெளியே வந்தபோது, ​​அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு அதிகாரி அவருடன் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகாரி வங்கிக்குள் ஒரு புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் கூறுகின்றது.

வங்கியின் பின்புறம் நிறுவப்பட்டிருந்த குளிரூட்டும் (ஏ/சி) இயந்திரத்தின் அருகே மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உதவி மேலாளர் காரை நெருங்கியதும் உள்ளே புகுந்து, இரண்டு பணப்பைகளையும் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பனதுறை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷான் டி சில்வா மற்றும் ஹொரணைஉதவி பொலிஸ் கண்காணிப்பாளர் இ.ஏ. ஏகநாயக்க ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில் சிறப்பு பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்திருந்துள்ளது.

தற்போது, ​​பல பொலிஸ் குழுக்கள், வங்கியின் சிசிடிவி காட்சிகளின் மூலம் தலைமறைவான சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த வங்கியின் சுற்றுவட்டாரத்தில், வங்கியைத் தவிர வேறு எந்த சிசிடிவி கமரா அமைப்புகளும் நிறுவப்படவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு – அவசர உதவிகோரும் பொலிஸார்

இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

அரியாலை, London, United Kingdom

உடுப்பிட்டி

அல்வாய், Colchester, United Kingdom

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

பருத்தித்துறை

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

மட்டக்களப்பு, Toronto, Canada

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

நுணாவில் மேற்கு, மன்னார்

London, United Kingdom

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

வண்ணார்பண்ணை

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

Markham, Canada

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

அளவெட்டி, கொழும்பு

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

Copyrights © 2026Tamilwin. All rights reserved.

மூல செய்தி: Tamilwin

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts