அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ள. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. இந்த பழத்தில் பல வகையான பழங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வகையான பழங்களும் பல வகையான நோய்களை குணமாக்குகிறது.
சத்துக்கள் :
ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது.
இரத்த அழுத்தம் :
வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இரத்த சோகை :
வாழைப்பழம் இரத்த சோகையை குணப்படுத்தக் கூடியது. வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புசத்து இருப்பதால், இரத்தசோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்து ஆகும்.
மேலும் இது நினைவாற்றலை தக்கவைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மது பழக்கம் :
வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.
வாழைப்பழத்தில் உள்ள பி6 மற்றும் பி12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவுகிறது.
வயிற்று பிரச்சனை :
வாழைப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கடுமையான வயிற்றுப்போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலை போக்கவும் அருமருந்தாக திகழ்கிறது. வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் பெண் ஏற்படுவதையும் வாழைப்பழம் தடுக்கிறது.
சளி :
வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடித்துக் கொள்கிறது என்று கூறி தவிர்த்து விடுகிறோம். உண்மையில் பழம் சளியை தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டுவரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது.