பிந்திய செய்திகள்

நாம் வெட்டி எறியும் தொட்டால் சிணுங்கி மூலிகையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாம் அனைவரும் தொட்டா சிணுங்கியை தொட்டு கொண்டு விளையாட மட்டும் தான் செய்துள்ளோம், ஆனால் இந்த சாதராண தொட்டா சிணுங்கியில் நம்மை ஆச்சிரியப்படுத்தும் அளவுக்கு நம்மைகளும், பல மருத்துவ குணங்களும் தொட்டா சிணுங்கியில் அமைந்துள்ளது.

தொட்டா சிணுங்கி:

தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டால் வாடி என்று என்னும் பல பெயர்களாக தொட்டாற் சிணுங்கி அழைக்கப்படுகின்றது. இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா என்பதாகும். இந்த தாவரத்தின் சிறப்பு, இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். இந்த தாவரத்தின் பூர்வீகம் தென் அமெரிக்கா என்று இதன் தாயகமாகக் கொண்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

தாவரத்தின் சிறப்பு பண்புகள்:

தொட்டாற்சுருங்கி, இலச்சகி, தொட்டால்வாடி ஆகிய பொதுப் பெயர்களும் வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை போன்ற சிறப்புப் பெயர்களையும் கொண்டது. இதற்கு அறியப்படும் வேறு ஒரு பெயர் ”ஆள்வணங்கி” ஆகும்.

தொட்டா சிணுங்கியின் அமைப்பு

தரையோடு படரும் செடிவகையான இதில், சிறு சிறு முட்கள் நிறைந்திருக்கும். சிறு பட்டையான காய்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இதன் மலர்கள், சிறிய பந்துபோல் காட்சியளிக்கும். இத்தாவரமானது ஐசோ-குவர்செடின் , அவிகுலாரின் டானின்கள், மைமோசைன் அபிஜெனின் போன்ற வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.

தொட்டா சிணுங்கி சுருக்கும் காரணம்:

ஒவ்வொரு செல்லும் சில திரவப் பொருட்களை இலைக்குள் கொண்டிருக்கும். இந்தத் திரவத்தின் அழுத்த மாறுபாட்டின் காரணமாக செல்களும், அவற்றாலான இலையும் நிமிர முடிகிறது. இலையின் உயிரணுவிலிருந்து திரவம் வெளியேறிவிட்டால், திரவ அழுத்தம் குறைந்து இலையின் உறுதித்தன்மை தளர்ந்துவிடும். புளிய மரம், தூங்குமூஞ்சி மரம் போன்றவை இரவு நேரத்தில் இவ்வாறே சுருங்குகின்றன.

தொட்டாற்சிணுங்கி இலைகளைத் தொடும்போது, அதன் தண்டுப் பகுதி ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. அதனால் இலையின் கீழ்ப்பகுதி செல்களில் உள்ள திரவத் தன்மை நீங்கிவிடுகிறது. ஆனால், இலையின் மேற்பகுதி செல்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. எனவே மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து மூடிக்கொள்கிறது.

தொட்டா சிணுங்கியின் மருத்துவ குணங்கள்:

உடல் சூடு அதிகமானால் சிறுநீர்த் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு இதன் இலையை அரைத்து 5- 6 நாள் 10 கிராம் அளவு காலையில், தயிரில் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

கை, கால் மூட்டு வீக்கம், ஒவ்வாமை, தோல் தடிப்புகள் குணமாக, தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

தொட்டா சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச் சூடு குறையும்.

வயிற்றுக்கடுப்பு தீர ஒரு கையளவு தொட்டால் சிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உண விற்கு முன் சாப்பிடவும்.

தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோளிணித்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.

தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோளிணி குறையும்.

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுத்து, 4 தேக்கரண்டி சாற்றுடன், தேன் கலந்து மூன்று வேளையும் குடிக்க வேண்டும். 

அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன் சிறிதளவு சீரகம் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிடவேண்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts