இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள Nakatiya என்ற ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் நர்மதா என்னும் ஐந்து வயது சிறுமி, தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள்.
அப்போது கூட்டமாக அங்கு வந்த குரங்குகள் சிறுமியைத் தாக்கியுள்ளன. மற்ற பிள்ளைகள் சத்தமிட, உள்ளூர் மக்கள் ஓடி வந்து, குழந்தையை குரங்கிடமிருந்து மீட்டிருக்கிறார்கள்.
நர்மதாவின் தந்தையான நந்த கிஷோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார். ஆனால், குரங்குகள் குழந்தையின் தோலைக் கிழித்து, கிட்டத்தட்ட அவளது உடல் முழுவதுமே கடித்துக் குதறிவிட்டிருக்கின்றன.
ஆகவே, குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகிவிட்டாள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் அந்தக் குரங்குகளை பிடிக்கவேண்டும் என வனத்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.