பிந்திய செய்திகள்

36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட் ஏவுவதற்கான பணியில் இஸ்ரோ தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

இதற்கிடையே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வரும் 14-ம் தேதி காலை 5:59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. – சி52 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அணுசக்தித்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் 129 செயற்கைக்கோள்களையும், 36 நாடுகளைச் சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் 1975 முதல் இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts