ஆந்திரா – விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 250 கிலோகிராம் கஞ்சாவுடன் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், தஞ்சை காவல்துறையின் தீவிர கண்காணிப்பு பணியின்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த லொறியை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சுமார் 60 இலட்சம் ரூபா இந்திய பெறுமதி மிக்க 250 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இந்த கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டதுடன், 3 கார்களும் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தஞ்சை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.













































