பிந்திய செய்திகள்

பப்பாளி மருத்துவக் குணம்

பப்பாளி ஒரு சுவையான பழம் மருத்துவக் குணம் மிக்கது என்று மாத்திரமே தெரியும். ஆனால் அதன் காய், பிஞ்சு, பால், விதை என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அது தொடர்பான இன்று பார்ப்போம்.

♦ பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண் போன்ற புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

♦ மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் பப்பாளி நல்லது.

♦ சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும்.

♦ பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

♦ குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

♦ பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

♦ பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

♦ பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

♦ பப்பாளிக் காய் குழம்பை, குழந்தை பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

♦ பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

♦ பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவிவர புண்கள் ஆறும்.

♦ பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்துவர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

♦ பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

♦ நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

♦ 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

♦ பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

♦ கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக சரிசெய்யும்.

♦ முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி சிறந்த மருந்து. அடிவயிற்றுப் பிரச்சினைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

♦ வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் பப்பாளி அருமருந்தாகும்.

♦ முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, பொலிவைக் கூட்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts