சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சுமார் 2 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்தது.
நேற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக அம்பை, சேரன்மகாதேவி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டியது. ஒரு சில இடங்களில் வானம் இருண்டு காணப்பட்டது. இதமான காற்று வீசியது.
அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், வி.கே. புரம், சேரன்மகாதேவி வரையிலும் பலத்த மழை பெய்தது.
சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சுமார் 2 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன. கன்னடியன், மணிமுத்தாறு அணைப்பகுதி மற்றும் நெல்லை மாநகர பகுதிகளிலும் கோடை ம