பிந்திய செய்திகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்

நேற்று முன்தினம் இரவு சென்னை தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது. அப்போது சுமார் 20 அடி உயரத்திற்கு மின் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த தேரை பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

அப்போது ஒரு இடத்தில் தேரை திருப்பியபோது அருகே சென்ற மின்கம்பியில் தேர் தட்டி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரிந்தது.

மேலும் மின்சாரம் தாக்கியதில் அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரதாப், மோகன், அன்பழகன் மற்றும் அவரது மகன் ராகவன் உட்பட மொத்தம் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தேர்த்திருவிழாவில் உயிரிழந்த11 பேரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது.

விபத்தில் முப்படை தலைமைத் தளபதி உயிரிழப்பு: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில்  மோட்ச தீபம் ஏற்றம்- Dinamani

இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மேலாளர் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகியான ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:

தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தைகள் இல்லை.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாணைப்படி காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts