பிந்திய செய்திகள்

முருங்கைமரம் பூராகவும் இத்தனை மருத்துவ பயன்களா?

வேறு பெயர் ! – சிக்குரு. இரஞ்சனம், கிளவி, சோபாஞ்சனம்,

இதன் குணம்-

உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும், கண்ணெரிச்சல் நீங்கும், தாதுக்கள் பலப்படும், ஆண்மை பெருகும், கை காலசதி போக்கும் எலும்புகளை உறுதியாக்கும், மலக்கட்டை ஒழிக்கும்.
முருங்கைமரம் இலை முதல் அடிவேர் வரை சிறந்த உணவுப் பொருளாகவும், மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது. முருங் உயிர்ச்சத்துக்களும், புரதப் பொருள்களும் சுண்ணாம்பு, இரும்புச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

இக் கீரையைப் பொரியல் செய்தும், தாளிதம் செய்தும், உணவுடன் சேர்த்து உண்ணலாம். துவரம்பருப்புடன் இக்கீரையைச் துவட்டலாகச் செய்து உண்பது பயன் அளிக்கும். முருங்கைப் பிஞ்சு சிறந்த கறி உணவாகும். பூவில் இருந்து பிஞ்சு தோன்றியவுடன் எடுத்துப்பாகம் செய்து உண்ணும் உணவு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது. முருங்கைக் காய் பலவகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

காயுள் இருக்கும் முற்றாக விதையுடன் கூடிய உட்சதை மிக்க சுவையுடையது. நாருடன் கூடிய அதன் மேற்பாகம் இனிப்புச்சுவை நிறைந்தது. மேற்றோலை மெல்லுவதால் பல்லுக்கு உறுதி ஏற்படுகின்றது முருங்கை காயில் அமைந்திருக்கும் விதையும் அதனுள்ளிருக்கும் பருப்பும் மிக்க சுவையுடையன. கொழுப்புச்சத்து நிறைந்தன. உடல் வலுவுக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தன. முருங்கையிலை, பூ, அனைத்துமே சிறந்த கறியாகும். சுருங்கக்கூறின் முருங்கை மரமானது முதல் நுனிவரை மருந்துக்காகப் பயன்படுகிறது.

முருங்கை கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்க வல்லது. எழுவகைத் தாதுக்களின் சூட்டைத் தணிக்கவல்லது. சிறு நீரைப் பெருக்கித்தள்ளும் வல்லமையுடையது. நரம்பு இசிவு என்பவற்றை தடுத்து நிறுத்தும் வல்லமையுடையது . சுக்கில உற்பத்தியைப் பெருக்கும். முருங்கைக் கீரை உண்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும், கண்ஒலி பெருகும் . முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்துச் சமைத்து உண்டுவர நீரிழிவு நோய் நீக்கும், உடல் வலுப்பெறும், காமாலை, மாலைக்கண் போன்ற நோய்களையும் நீக்கும்.

இக்கீரை இரத்தவிருத்திக்கும். தாது பலம் பெறவும் பெரிதும் பயன்படும். முருங்கைப் பூவைப் பருப்புடன் வேக வைத்து உண்டுவந்தால் தலைக்கேறிய பித்தமும் வெப்பமும் தணிந்து கண்ணெரிச்சல் நீங்கும்.

ஆண்மைச் சக்தியும் உண்டாகும் . முருங்கை குழம்புவகைகளை உண்பதால் மார்புச்சளி ஆகியன நீங்கும். நரம்புகள் வலிமை பெறும். அதிகமாக உண்பதால் உஷ்ணவாய்வு நோய்கள் உண்டாகும். குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் சுரக்கும், முருங்கைக் கீரைச் சாற்றுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டைக் குழியில் தடவ இருமல், குரல் கம்மல் முதலியன நீங்கும்.
இதயம் வலிமைபெற விரும்புவோர் முருங்கைப் பூவை அவித்து உணவோடு சேர்த்துச் சில நாட்கள் தொடர்ந்து உண்டால் பூரண பயன் கிடைக்கும். வாதம், முடக்குவாதம் , இளம்பிள்ளை வாதம் முதலியவற்றிற்கு முருங்கை விதையிலிருந்து எடுக்கப்படும்.

எண்ணெய் வாதவலி தீர்க்கும் பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது, முருங்கைப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு பல தைலங்களில் சேர்க்கப்படுகின்றது. வீக்கங்கள் , கட்டிகள் ஆகியவற்றில் வைத்துக் கட்டுவதும் உண்டு. முருங்கைப்பட்டைச் சாற்றுடன் குப்பைமேனிச் சாற்றைச் சேர்த்து எண்ணெய் விட்டுக் காய்ச்சி கரப்பன், சொறி, சிரங்கு ஆகியனவற்றுக்குப்பூச அவை நீங்கும், முருங்கைப்பிசினை நல்லெண்ணெயில் கரைத்துக் விட காதுவலி நீங்கும். முருங்கைவேரின் சாற்றுடன் பால் சேர்த்து தக்க அளவாக உண்டுவர விக்கல், ஆஸ்துமா, கீழ் வாதம், உவளுறுப்புகளின் வீக்கம், முதுகுவலி முதலியன நீங்கும்,

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts