நம்மை யார் பார்த்தாலும் முதலில் கண்களை தான் பார்க்கிறார்கள் சிலருக்கு கண்களுக்குக் கீழ் சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ வீக்கம் இருக்கும். சில சமயத்தில் அந்த வீக்கம் நம்மைச் சோர்வானவ ராகவும் கவர்ச்சியற்ற வராகவும், சோகமாக இருப்பவரா கவும் பிறருக்குக் காட்டி விடும்.
சரி… கண்ணுக்குக் கீழ் ஏன் வீக்கம் ஏற்படுகிறது, அதை எளிய முறையில் தடுப்பதற்கும் தீர்ப்பதற்கு மான வழிமுறைகள் என்னென்ன… பார்க்கலாமா?
பரம்பரை வழியில் சிலருக்கு கண்ணுக்குக் கீழ் வீக்கம் ஏற்படும். பெற்றோருக்கு அப்படி இருந்தால், பிள்ளைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் அப்படி ஏற்படக் கூடும்.
இன்னும் சிலருக்கு முதுமையை அடையும் போது தோல் சுருங்கி, கொழுப்புகள் எல்லாம் பைகள் போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும்
கண்ணுக்குக் கீழ் இருக்கும் செல்கள் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடியவை. எனவே, உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர் சேர்வது அதிகரித்து, அதன் காரணமாகவும் கண்ணில் வீக்கம் அதிகரிக்கும்.
சில நேரங்களில் வீக்கமான கண்கள், சிறுநீரகக் கோளாறு களுக்கு அறிகுறியா கவும் இருக்கலாம்.
சிறுநீரகக் கோளாறு
எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அரிப்பு, வறண்ட சருமம், வீங்கிய கால்கள் மற்றும் பாதங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரைத் தொடர்பு கொள்வது நல்லது.
கல்லீரல் நோய்களும் சிலருக்குக் கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் கண் வீக்கத்தோடு தூக்க மின்மை, வறண்ட வாய், கண்கள், வயிற்று வலி, கிறுகிறுப்பு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பொதுவாக, கண்களுக்குக் கீழ் வீக்கம் வராமல் பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறை களைப் பின்பற்றினாலே போதும். அவை…
ஆழ்ந்த உறக்கம் அவசியம்
ஆழ்ந்த தூக்கம்தான் கண் வீக்கத்தில் இருந்து விடுதலை கொடுக்கும். தூங்கும் நேரம் ஒவ்வொருவரு க்கும் அவரவர் பணிச்சூழல், வாழ்க்கை முறைக்கேற்ப மாறுபடும். ஆனால், ஒருவர் நாள் ஒன்றுக்கு ஏழிலிருந்து ஒன்பது மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியம்.
தினமும் தூங்குவதற் கான நேரத்தைத் திட்டமிட்டுக் கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்திலேயே தூங்க முயற்சிக்க வேண்டும்.
தூங்குவதற்கு முன்னர் ஒரு குளியல் போடுவது, புத்தகம் படிப்பது போன்றவை நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
உப்பில் கவனம்
உடலில் சேரும் அதிக உப்பு, கண்ணில் நீரைத் தேக்கி வைக்கக் கூடும். பொதுவாகவே நம் உணவு முறையில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வது பழக்கமாகி விட்டது.
ஆனால், ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு கிராம் உப்பை மட்டும்தான் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவும் கண்ணின் வீக்கம் ஏற்படாமல் தடுக்கும்.
ஈரத்துணி உதவும்
கண்ணுக்குக் கீழ் குளிர்ச்சியான ஈரத்துணியை பத்தில் இருந்து இருபது நிமிடங்கள் வைத்திருக்க லாம்.
குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை வீக்கத்தைக் குறைக்கச் செய்யும். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி, கண்ணுக்கு கீழ் வைக்கலாம்.
வெள்ளரிக்காய் துண்டு
வெள்ளரிக்காய்த் துண்டுகளை கண்ணின் வீக்கத்துக்குப் பயன்படுத்த லாம். வெள்ளரிக் காயை ஃபிரிட்ஜில் வைத்து அதை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு, கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை சில நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
வெள்ளாரிக் காயில் இருக்கும் கேஃபிக் அமிலம் (Caffeic acid) மற்றும் ஆஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) கண்ணின் கீழ் சேரும் நீர்த் தேக்கத்தைக் குறைக்கும்.
வறண்ட சருமத்தைப் போக்கும். கண்ணுக்குக் கீழ் கருவளையம் இருந்தாலும் சரியாகி விடும்.
தேநீர் பை
தேநீரில் இருக்கும் டேனின்ஸ் (Tannins) இயற்கை யாகவே சுருங்கும் தன்மை கொண்டது. கண்ணின் மேல் குளிர்ச்சியான தேநீர் பைகளை சில நிமிடங்கள் வைத்திருந் தாலும் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சில நாள்களில் போய்விடும்.
உயரமான தலையணை
தலையை நேராக வைத்துப் படுப்பதால், புவி ஈர்ப்பு விசையில் அதிகத் தண்ணீர் கண்ணில் தேங்கி விடும். அதனால், தலையை சற்று உயரமாக வைத்து க்கொண்டு தூங்குவது நல்லது.
உயரமான தலையணை வைத்துத் தூங்கினால், காலையில் வீங்கிய கண்களுடன் கண்விழிக்க வேண்டியது இருக்காது.
அலர்ஜிகளும் கண் வீக்கத்துக்கு முக்கியமான காரணங்கள். முடிந்த வரை அலர்ஜிகள் ஏற்படுத்தும் தூசு, மகரந்தம், பூஞ்சை ஆகிய பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
மருத்துவர்கள் அலர்ஜிக்கு மருந்துகளும் கொடுப்பார்கள். அவற்றையும் பயன்படுத்தலாம்.
இந்த வழிகளைக் கடைபிடித்தால், கண்ணின் வீக்கம் குறைந்து அழகான, பளிச்சிடும் கண்களைப் பெறலாம். முகமும் மலர்ச்சியோடு காணப்படும்.