கடந்த சில நாட்களாக உலக அளவில் ரஷியா உக்ரைன் போர் மற்றும் உலக விவகாரங்களால் கோதுமை விலை ஏறி வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில்,
சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருகிறது. இதையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிலருக்கு மட்டும் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி கோதுமை ஏற்றுமதி செய்பவர்கள், ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து கோதுமைக்கான தொகையை பெற்றதற்கான கடிதத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.