சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், ஓர் அற்புதமான மருந்து, மாசிக்காய். இக்காய் மற்ற மரங்களின் காயைப் போல், பூவிலிருந்து காயாகாது.
இந்த மரத்தின் கிளைகளை ஒருவித பூச்சிகள், துளையிடும்போது, கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும். இதுவே மாசிக்காயாகும்.
பெண்களுக்கே உண்டான ஒரு இயற்கை வரம் தாய்மை ஆகும். பெண்களுக்கு மாதந்தோறும் வெளியேறும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் பல பெண்களுக்கு.
அவர்கள் இந்த மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும்.
கருப்பையில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் நீங்கும். கருப்பை பலம் பெறும். மாசிக்காய் பொடியை குடிநீரில் கலந்து வாய்கொப்பளித்து வர நாக்கில் இருக்கும் புண்கள் ஆறும்.
மாசிக்காய் பொடியை நீர்விட்டு நன்கு குழைத்து ஆசனவாயில் மூலம் பாதிப்பால் ஏற்பட்ட புண்கள், கட்டிகள் போன்றவற்றின் மீது தடவி வர சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீதும் மாசிக்காய் பொடியை தினமும் நீரில் குழைத்து தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதை தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும்.
டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் நமது சுவாசப் பாதைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட இப்பிரச்னைகளிலிருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
மாசிக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு, 10 நிமிடம் சென்ற பின் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
வெள்ளைப்படுதல், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலியவை குணமாகும்.
பொதுவாக குழந்தைகளுக்கு, உரைத்துக் கொடுக்கப்படும், உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும்.
அதிக மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் பயன்கள் !
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, பச்சை பச்சையாக பேதியாகும். இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு,
அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வந்தால் பேதி நிற்கும்.
மயில் துத்தம், பூநீறு உப்பு, சுண்ணாம்பு நீர், அபினி, நாபி, எட்டி முதலியவற்றை அளவுக்கு மீறி உட்கொள்வதால் ஏற்படும் நஞ்சுக்கு, சிறந்த முறிவாக மாசிக்காய் பயன்படுகிறது.
மாசிக்காயிலிருந்து ஒருவகை மஞ்சளும், வெண்மையும் கலந்த நிறம் உடைய, துவர்ப்புச்சுவை கொண்ட உப்பை எடுக்கிறார்கள்.
இது சிறந்த துவர்ப்பியாகவும், ரத்தப் போக்கை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது.
நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிலிட்டு, 30 மி.லி., முதல் 60 மி.லி., வீதம் அருந்தி வந்தால், பலன் கிடைக்கும்.
தொண்டை வலி, டான்சிலைட்டிஸ் எனப்படும் தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன்,
3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் குணம் தெரியும்.
மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊற வைத்து, ஊறல் குடிநீரை வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
அல்லது கஷாயம் வைத்தும் பயன்படுத்தலாம். 30 60 மி.லி., வரை அதையே உள்ளுக்கும் அருந்தி வரலாம்.
இதன் மரப்பட்டையை சாதாரண கழிச்சல், ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், மாதவிலக்கின் போது அதிக ரத்தம் வெளியாதல், மேக நோய்,
ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல், சீதக்கழிச்சல் முதலிய பிரச்னைகள் தீரவும் கொடுக்கலாம். தக்க மருத்துவரின் ஆலோசனையை கேட்டு, பின்பற்றுவது நல்லது.