கரூர் மாநகராட்சி உட்பட்ட சுங்ககேட் பகுதியை அடுத்து உள்ளது சிவசக்தி நகர். இந்தப் பகுதியில் கணவரை பிரிந்து சென்று விட்ட நிலையில் தனது சஞ்சய் என்கின்ற 23 வயது மகனுடன் சத்தியபாமா என்பவர் வசித்து வந்துள்ளார்.
ஒரு தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்துள்ளார். அந்த கல்லூரியில் படிப்பை தொடர முடியாமல் வெளியேறி மற்றொரு தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார்.
கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் கடந்த ஒரு ஆண்டு காலமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மாணவன் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.
12ம் வகுப்பு படிக்கும் போதே free fire விளையாட்டில் ஆர்வம் கொண்ட சஞ்சல் பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்த பிறகு அந்த ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாபரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதை அடுத்து இளைஞர் தொடர்ந்து அந்த கேமை ஆடி வந்துள்ளார்.
இரவு பகலாக விளையாடி நிறைய பணம் சேர்த்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கிடைக்கின்ற வேலைகளை உடன் வரும் சக நண்பர்கள் சென்று வேலை பார்த்து வந்துள்ளான்.
உடன் இருந்த ஒரு நண்பன் பேசுவதற்காக செல்போனை வாங்கி கேமின் user I’d, password திருடி தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு செல்போன் தொலைந்து விட்டதாக கூறி ஏமாற்றியுள்ளனர். மேலும், சஞ்சயிடம் இருந்து திருடப்பட்ட user name, password கொண்டு விளையாடுவதை பார்த்து சக நண்பர்களிடம் கூறி புலம்பியுள்ளான்.
இது நடந்து 6 மாத காலம் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மற்றொரு user I’d, password விளையாடி வந்துள்ளதை மற்றொரு நண்பன் செல்போனில் பேசி விட்டு தருவதாக கூறி வாங்கி திருடிக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக மன உளைச்சலில் இருந்த சஞ்சய் தனது அம்மா வேலைக்கு சென்ற நேரத்தில் அம்மாவின் புடவையை கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.