Copyrights © 2026 Tamilwin. All rights reserved.
தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே நாட்டில் பொருளாதார
நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், ஆட்சி கவிழப்போகின்றது என்றும் எதிரணிகள்
திட்டமிட்ட பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன என்று ஊடகத்துறை அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தற்போதைய அரசு மிகவும் ஸ்திரமான நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என்றும், முன்னாள் ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்தது போன்று தற்போதைய அரசும்
கவிழும் என்றும் எதிரணி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள்
குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு
கூறினார்.
இலங்கையை உலுக்கிய கோர விபத்து : மாணவன் – பெண்கள் உட்பட மூவர் பலி
இது குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நாடு பொருளாதார ரீதியாக
வீழ்ச்சியடையும் என எதிரணிகள் முதலில் கூறின. அது நடக்காமல் போனதும், பின்னர்
மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடையும் எனப் பிரசாரம் செய்தன.
இவ்வாறு அடுத்தடுத்து
மாதங்களைக் குறிப்பிட்டுக்கொண்டு எதிரணி உறுப்பினர்கள் போலி அரசியல் நடத்தி
வருகின்றனர்.
தமக்கு எஞ்சியுள்ள கட்சியின் ஆதரவாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும்,
தங்களின் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் மட்டுமே நாடு வீழும்,
அரசு கவிழும் என்றெல்லாம் கதைகளை சோடித்துக் கூறி வருகின்றனர்.
எதிரணியினரால் ‘திருடர்களைப் பிடிப்போம், ஊழல்களை ஒழிப்போம், மக்களுக்குப்
பொருளாதார நிவாரணங்களை வழங்குவோம்’ என்று மேடைகளில் கூற முடியாது.
ஏனெனில்
மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். அதனால்தான், பொருளாதார வீழ்ச்சி பற்றிப்
பேசி, மாதங்களைக் கணக்குக் காட்டி நாள்களைக் கடத்தி வருகின்றனர்.
இதுதான் அவர்களின் தற்போதைய அரசியல் பாணி. அதற்கு நாம் வழிவிடுவோம், அது பற்றி
நாம் எவ்விதத்திலும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் துன்புறுத்தல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்
உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom
தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom
பருத்தித்துறை
மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை
புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland
மட்டக்களப்பு, Toronto, Canada
அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை
அல்வாய், Colchester, United Kingdom
நுணாவில் மேற்கு, மன்னார்
London, United Kingdom
நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada
உடுப்பிட்டி
வண்ணார்பண்ணை
பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom
மானிப்பாய், கொட்டாஞ்சேனை
Markham, Canada
சுதுமலை, நல்லூர், கனடா, Canada
மண்டைதீவு, Brampton, Canada
அளவெட்டி, கொழும்பு
கொழும்பு, இளவாலை
நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia
புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada
புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom
Copyrights © 2026Tamilwin. All rights reserved.
மூல செய்தி: Tamilwin













































