73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடி ஏற்றினார். இதன்போது கொடிமீது ஹெலிகாப்டரில் இருந்து மூவர்ணக் கொடி மீது மலர்கள் தூவப்பட்டன.
முன்னதாக முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார். விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
அதேசமயம் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குடியரசுத் தின விழாவில் காலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யபபட்டுள்ளன. மேலும் குடியரசுத் தின விழாவைக்க காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.













































