பிந்திய செய்திகள்

இலங்கையில் பூர்த்தியான ஒரு வருடம்-இந்தியா வாழ்த்து

இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெற்றிகரமான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையின் தலைமைத்துவத்திற்கும், சுகாதார அமைச்சிற்கும், முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கும் மற்றும் கொரோனா தடுப்பூசி வழங்கலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts