பிந்திய செய்திகள்

நீங்கள் தலைக்கு குளிக்கும்போது முடி உங்கள் கையோடு வருதா?அப்போ இதை செய்து பாருங்கள்

நாம் நமது கூந்தலை அழகாக வைத்திருக்க, அதன் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். தவறான முறையில் தலைமுடியைக் கழுவுதல் மற்றும் அதிகப்படியான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை முடி கெட்டுவதற்கு வழிவகுக்கும்.

இதனால் கூந்தலில் பிரச்சனைகள் ஏற்படுவதோடு கூந்தலில் வறட்சியும் ஏற்படும். உங்கள் தலைமுடி கெட்டுவதை பாதுகாக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

தலைமுடியை சுத்தம் செய்வதற்கான வழிமுறைகள்:

ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளிக்கும்போது, அதிக தண்ணீர் விட்டு, முடியை சரியாக அலசுவது மிக அவசியமாகும். இப்படி செய்யத் தவறினால் தலைமுடிக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஷாம்பூ பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன், முடியை நன்றாக சீர் செய்து நன்றாக மசாஜ் செய்யவும்.

மேலும், தலைமுடியைக் கழுவுவதற்கு மிகவும் குளிர்ந்த நீரையோ அல்லது வெந்நீரையோ உபயோகிக்க கூடாது. இதனால் முடி வறண்டு போகலாம். சாதாரண நீரில் முடியைக் கழுவவும். மேலும், தினமும் தலைக்கு குளிப்பதைத் தவிர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே தலைக்கு குளிப்பது நல்லது.

கண்டிஷனரை உபயோகிப்பதில் கவனமாக இருக்கவேண்டும்:

ஷாம்பூவை தலைமுடியில் பயன்படுத்திய பிறகு, சரியான கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். இதேவேளை அதிக கண்டிஷனரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வாரத்திற்கு இரு முறையாவது தலைமுடியின் ஆழமான சீரமைப்பு அவசியம். உச்சந்தலையில் கண்டிஷனரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.

இந்த வகையில் கூந்தலை உலர விட வேண்டும்:

தலைக்கு குளித்த பின் தலைமுடியை கழுவி கண்டீஷன் செய்த பிறகு சரியான முறையில் உலர்த்துவது மிக அவசியமாகும். எப்போதும் காட்டன் துணியால் முடியை நன்றாக உலர வைக்கவும். இது தலைமுடியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடி உடையாமல் பார்த்துக்கொள்ளும். துண்டு கொண்டு முடியை மிகவும் வேகமாக தேய்ப்பதை தவிர்க்கவும். அடிக்கடி டிரையரை பயன்படுத்துவதும் தவறு. இதன் வெப்பம் முடியை சேதப்படுத்தும்.

தலைமுடி பராமரிப்பு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:

கூந்தல் பராமரிப்புப் பொருட்களான ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதால் தலைமுடி சேதமடைகிறது. இவை முடியின் துளைகளை அடைத்து, முடி உதிர்வதற்கு காரணமாகின்றன.

அதிக நேரம் முடியை கழுவ வேண்டாம்

அதிக நேரம் தலைக்கு குளித்து, முடியை நீண்ட நேரத்திற்கு நீரில் சுத்தம் செய்தால், கூந்தல் நீண்ட நேரம் ஈரமாக இருக்கும். இதனால், முடி வலுவிழந்து உடையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts